Skip to main content

Translate Blog

களவும் கற்று மற

பார்வையாளர் கவனத்திற்கு: இந்த இணையத்தளப்பதிவினை உங்கள் சுய விரும்பின் பெயரில் நீங்கள் பார்வையிடுகிறீர்கள். சில வேளைகளில் இங்கு கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் உங்கள் தேவைக்கு அதிகமாக, உங்களை அசெளகரியத்திற்குள்ளாக்குவதாக இருக்கலாம். உங்களுக்கு இருக்கும் சந்தேகங்கள், கேள்விகள் மற்றும் ஏனைய உதவிகளுக்கு Support யை நாடவும்.


திருமணத்திற்கு முன்னர் கலவிப் பொருத்தம் பார்ப்பது எப்படி?

திருமணத்திற்கு ஜாதகப் பொருத்தம் பார்ப்பது நமது கலாச்சாரத்தைப் பொறுத்தவரையில் இயல்பான ஒன்று. 12 பொருத்தங்களில் தினப் பொருத்தம், கணப் பொருத்தம், மகேந்திரப் பொருத்தம், ஸ்திரீதீர்க்கம், யோனிப் பொருத்தம், இராசிப் பொருத்தம், இராசியாதிப் பொருத்தம், வசியப் பொருத்தம், ரச்சுப் பொருத்தம், வேதைப் பொருத்தம் ஆகிய 10 பொருத்தங்களே முக்கியமாகப் பார்க்கப்படுகிறது.

Samudrika Laksanam

ஒருவரின் பிறந்த நட்சத்திரத்தை வைத்து அவரின் இனப்பெருக்க உறுப்பு தொடர்பாக ஊகிக்க முடியுமா?

கணவன் மனைவிக்கு இடையிலான ஈர்ப்பு, கவர்ச்சி, காதல் போன்றவற்றை பிறந்த நட்சத்திரத்தை வைத்து வசியப் பொருத்தம் அளவிடுகிறது. கணவன் மனைவி இருவரும் ஒருவரை ஒருவர் சமமாக விரும்பி, அன்பின் பிணைப்பிலும் அணைப்பிலும் இனைந்து இரண்டறக் கலக்கும் தன்மையை அடைவதற்கு இந்த வசியப் பொருத்தம் சிறப்பாக அமைந்திருக்க வேண்டும்.

அந்த வகையில் ஜாதகத்தை வைத்து இனப்பெருக்க உறுப்புகளின் அளவை ஊகிக்க முடியுமா? அவுத்துப் பார்க்காமல் ஒரு ஆணின்(அதாவது எதிர்காலத்தில் கணவனாக வரப் போகும் ஆண்) ஆண்குறியின் நீளத்தை அறிவது எப்படி?

அவுத்துப் பார்க்காமல் ஒரு ஆணின் ஆண்குறியின் அளவை ஊகிப்பது எப்படி?

அதனை தீர்மானிக்க உதவியாகவே யோனிப் பொருத்தம் பார்க்கப்படுகிறது. இது தாம்பத்ய சுகத்தை உறுதி செய்ய வழிவகுக்கும்.

ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் ஒவ்வொரு மிருகம் உண்டு. பெண், ஆண் நட்சத்திரங்கள், பெண்ணுக்குப் பெண் யோனியாகவும், ஆணுக்கு ஆண் யோனியாகவும் பகையில்லாமலிருந்தால் உத்தமம். இருவருக்கும் ஆண் யோனியாக இருந்தால் ஆகாது. இது, ஆண் பெண் ஆகிய இருவருடைய உடலமைப்புகளும் ஒன்றுக் கொன்று பொருத்தமாகவும், உடல் உறவு கொள்வதற்கு ஏற்றவையாகவும் அமைவதற்கு ஆதாரமாகும்.

  • அசுவினி - ஆண் குதிரை
  • பரணி - ஆண் யானை
  • கார்த்திகை - பெண் ஆடு
  • ரோகிணி - ஆண் நாகம்
  • மிருகசீரிஷம் - பெண் சாரை
  • திருவாதிரை - பெண் நாய்
  • புனர்பூசம் - பெண் பூனை
  • பூசம் - ஆண் ஆடு
  • ஆயில்யம் - ஆண் பூனை
  • மகம் - ஆண் எலி
  • பூரம் - பெண் எலி
  • உத்திரம்- எருது
  • அஸ்தம் - பெண் எருமை
  • சித்திரை - பெண் புலி
  • சுவாதி - ஆண் எருமை
  • விசாகம் - ஆண் புலி
  • அனுஷம் - பெண் மான்
  • கேட்டை - கலைமான்
  • மூலம் - ஆண் நாய்
  • பூராடம் - ஆண் குரங்கு
  • உத்திராடம் - மலட்டு பசு/கீரி(Mongoose)
  • திருவோணம் - பெண் குரங்கு
  • அவிட்டம் - பெண் சிங்கம்
  • சதயம் - பெண் குதிரை
  • பூரட்டாதி - ஆண் சிங்கம்
  • உத்திரட்டாதி - பாற்பசு
  • ரேவதி - பெண் யானை
Yoni Kuta Table - Animal and Yoni Poruththam

இவற்றில்,

பாம்பு x கீரி

யானை x சிங்கம்

குரங்கு x ஆடு

மான் x நாய்

எலி x பூனை

குதிரை x எருமை

பசு x புலி

போன்றவை ஜென்ம பகை என்பதால் தவிர்க்க வேண்டும்.

இதற்கும் ஆண்/பெண்ணின் அந்தரங்க உறுப்புகளுக்கும் என்ன சம்பந்தம் என்று கேட்பது எமக்கு புரிகிறது! அவை சம்பந்தமில்லாது எப்படி பாலியல் ரீதியான திருப்தி பற்றி கதைக்க முடியும்?

ஒருவரின் "யோனி" தொடர்பான மேலதிக குறிப்புகள் அவரின் ஜாதகத்தின் பின்னால் இருக்கும் குறிப்புகளில் உள்ளடக்கப்பட்டிருக்கும்.

மேலே குறிப்பிட்ட மிருகங்களில் அந்தரங்க உறுப்புகளின் அளவை இணையத்தின் உதவியுடன் எம்மால் ஊகிக்க முடியாதா? 
முடியும் இல்லையா! நமது முன்னோர்கள் அந்த மிருகங்களின் தன்மை தொடர்பான உதாரணத்திற்காக மாத்திரம் அவற்றை உதாரணமாக/உவமையாகக் குறிப்பிடவில்லை என்பதை காம சூத்திரங்கள், கலவிப் பொருத்தத்தில் ஆண்குறியின் அளவு, பெண்குறியின் அளவு தொடர்பாக குறிப்பிட்ட குறிப்புகளை வாசித்தால் புரியும்.

கலவிப்பொருத்தம் தொடர்பாக காம சூத்திர அறிஞர்கள் என்ன சொல்லியிருக்கிறார்கள் என்பதை இனி விரிவாகப் பார்ப்போம்.
ஆணும் பெண்ணும் கூடி கலவி செய்வதிலே கவனிக்கத்தக்கவைகளில் ஆழம், நீளம் எனும் இரு சொற்கள் முக்கியமானதாகும்.

“நீளம்” என்பது ஆணின் லிங்கத்தை (குறியை) குறிப்பதாகும்.

“ஆழம்” என்பது பெண்ணின் யோனியைக் குறிப்பதாகும்.

லிங்கம் சிலருக்கு அதிக நீளமாகவும், சிலருக்கு சாதாரண நீளமாகவும், இன்னும் சிலருக்குச் சிறியதாகவும் காணப்படும்.

யோனியானது சில பெண்களுக்கு ஆழமாகவும், சில பெண்களுக்கு ஆழமற்றதாகவும் காணப்படும்.

இந்த ஆழ – நீளத்தை விளக்க காமசூத்திர அறிஞர்கள் முயல், மான், எருது, குதிரை, யானை என்று மறைமுக உவமைகளோடு குறிப்பிடுகிறார்கள். அதற்கு காரணம் முயல், மான், எருது, குதிரை, யானை ஆகியவற்றை அனைவரும் அறிவதோடு, அவற்றின் தோற்றம், அமைப்பு, உறுப்புகள், செயல் யாவும் நன்றாகத் தெரியுமென்பதால் அவற்றை உவமைகளாக குறிப்பிடும் போது ரசனையாகவும், சுலபமாகவும் புரிந்து கொள்ளமுடியும் என்பதே.


தன்னுடைய லிங்கம் எத்தகையது என்பதை ஒவ்வொரு ஆணும் தெரிந்து கொள்வதில் எவ்விதக் கஷ்டமுமில்லை. அதேபோல யோனியின் தன்மையை ஒவ்வொரு பெண்ணும் புரிந்து கொள்ள முடியும். மேலும், பெண்ணின் யோனியை ஆணும், ஆணின் குறியை பெண்ணும் தெரிந்து கொள்வதில் எந்தச் சிரமமும் இல்லை. தோற்றத்திலும் செயலிலும் தெரிந்து கொண்டுவிடலாம். இதனையே மேலே யோனிப்பொருத்தத்தில் குறிப்பிட்டுள்ளோம். உங்கள் நட்சத்திரத்தை வைத்து உங்கள் யோனியின் தன்மையை அறிய முடியும்.


ஜாடியில் உள்ள தேனைச் சுவைப்பதற்கு தக்க கரண்டியைப் போட்டு எடுத்தால்தான் தேனும் கிடைக்கும். சுவைக்கவும் செய்யலாம். சிறிய கரண்டியைப் போட்டால் உள்ளே விழுந்து விடும். பிறகு தேனைச் சுவைப்பது எப்படி? இது தான் ஆழ-நீளப் பொருத்தத்துக்கான சிறியதொரு உதாரணம்.

உறுப்புகளின் வகைகள்(ஆண்)

  • முயல் வகை ஆண்குறி எல்லாவற்றிலும் சிறியது.
  • எருது வகை ஆண்குறி நடுத்தரமானது.
  • குதிரை வகை ஆண்குறி மிக நீளமானது.

உறுப்புகளின் வகைகள் (பெண்)

  • பெண் மான் வகைப் பெண்குறி மிகவும் ஆழம் குறைந்தது.
  • பெண் குதிரை வகைப் பெண்குறி நடுத்தர ஆழமுடையது
  • பெண் யானை வகைப் பெண்குறி மிகவும் ஆழமானது.

யோனியின் ஆழத்துக்குத் தகுந்தவாறு அதன் சுற்றளவு அமைந்திருப்பினும் அது சுருங்கி விரியும் தன்மையுடையதென்பதால் சுற்றளவு மாறுபடக்கூடும். நீளத்துக்கும் குறைவான ஆழத்துக்கும் பொருந்தாது. குறைவான நீளத்துக்கும் அதிக ஆழத்துக்கும் பொருந்தாது. சரிசமமான ஆழத்துக்கும் சரிசமமான நீளத்துக்குமே பொருந்தும்.

குறிகளின் அளவு (ஆண்)

முயல் வகை – ஆண்குறியின் நீளம் – குறைந்தது நான்கு அங்குலம் (10செ.மீ).

எருது வகை – ஆண்குறியின் நீளம் – குறைந்தது ஆறு அங்குலம் (15செ.மீ).

குதிரை வகை – ஆண்குறியின் நீளம் – குறைந்தது எட்டு அங்குலம் (20செ.மீ).

குறிகளின் அளவு (பெண்)

பெண் மான் வகை – யோனியின் ஆழம் – குறைந்தது நான்கு அங்குலம் (10செ.மீ).

பெண் குதிரை வகை – யோனியின் ஆழம் – குறைந்தது ஆறு அங்குலம் (15செ.மீ).

பெண் யானை வகை – யோனியின் ஆழம் – குறைந்தது எட்டு அங்குலம் (20செ.மீ).

பிடிப்பு என்பதென்ன?

பிடித்துக் கொள்ளுதல், கவ்விக் கொள்ளுதல் என்பவைகளே. ஒருவர் கையை மற்றொருவர் பிடித்துக் கொள்ளும் போது, பலமுள்ள ஒருவர் சற்று அழுத்தமாக பிடித்துக் கொள்வார். இன்னொருவர் சாதாரணமாகப் பிடித்துக் கொள்வார். வேறொருவர் மிகவும் தளர்வாகப் பிடித்துக் கொள்வார். இதைப்போன்றதே ஆணும் பெண்ணும் கூடிக்கலவி செய்யும் போது உண்டாகும் பிடிப்பு.

ஆணின் லிங்கத்தை பெண்ணின் யோனிக்குள் நுழைக்கும் போது, எத்தகைய லிங்கமானது எத்தகைய யோனிக்குள் நுழைக்கப்படுகின்றது என்பதைக் குறிப்பிடவே இந்தப் பிடிப்பு என்ற உதாரணம் கூறப்படுகிறது.

அதாவது ஒன்றையொன்று கவ்விப் பிடித்துக் கொள்ள வேண்டும். அப்போதுதான் ஆணுக்கும் பெண்ணுக்கும் நெருக்கமான உடல் உறவு உண்டாகி, உணர்ச்சி மேலிட்ட இன்பம் காணமுடியும்.

அதிகக் கெட்டியான பிடிப்பு

குதிரை வகை ஆண் X பெண் மான் வகைப் பெண்.

மேற்காணும் வகை ஆணும் பெண்ணும் புணர்ச்சி செய்யும் போது வேதனை உண்டாகாமல் செய்ய இயலாது. ஏனென்றால் பெண்ணின் யோனி ஆழத்தைக் காட்டிலும் ஆணின் லிங்கம் மிக நீளமானதாகும்.

கெட்டியான பிடிப்பு

எருது வகை ஆண் X பெண் மான் வகைப் பெண்.

மேற்காணும் வகை ஆணும் பெண்ணும் புணர்ச்சி செய்வது சிரமமானதாகும். ஏனென்றால் பெண்ணின் யோனி ஆழத்தைக் காட்டிலும் ஆணின் லிங்கம் நீளமானது.

தளர்ந்த பிடிப்பு

முயல் வகை ஆண் X பெண் குதிரை வகைப் பெண்

எருது வகை ஆண் X பெண் யானை வகைப் பெண்

மேற்காணும் வகை ஆணும் பெண்ணும் புணரும்போது தளர்ச்சியாக இருக்கும். ஏனென்றால் பெண்ணின் யோனி ஆழத்தைக் காட்டிலும் ஆணின் லிங்கம் சிறியதாக இருப்பதால் போதிய இன்பம் காண இயலாது.

அதிகத் தளர்ச்சியான பிடிப்பு

முயல் வகை ஆண் X பெண் யானை வகைப் பெண்.

மேற்காணும் வகை ஆணும் பெண்ணும் புணரும்போது ஒன்றையொன்று உராய்வதில்லை. ஏனென்றால் பெண்ணின் யோனியைக் காட்டிலும் ஆணின் லிங்கம் மிகவும் சிறியது

பொருந்தாத புணர்ச்சி காரணமாகவே ஆண் பெண் இருவரின் நாட்டமும் வெவ்வேறு திசைகளில் செல்லக்கூடும்.

இப்போது சொல்லுங்க, ஒருத்தரோட நட்சத்திரத்தை வைத்து அவரை அவுத்துப் பார்க்காமல் அவரின் அந்தரங்க உறுப்பை பற்றி ஊகிக்க முடியுமா? இல்லையா?

பரிசோதித்துப் பார்ப்போமா? உங்க நட்சத்திரம் என்ன? உங்கள் ஆண்குறியின் நீளம் என்ன? இங்கு குறிப்பிடப்பட்டுள்ள உவமைக்கும் உங்கள் ஆண்குறியின் அளவுக்கும் ஒத்துப் போகிறதா?

முழுமையாக புடைத்தெழுந்திருக்கும் போது உங்கள் ஆண்குறியின் அளவு அளப்பதன் மூலம் தெரிந்து கொள்ள முடியும்.

அளவு நாடாவை உங்கள் ஆண்குறியின்(புடைத்தெழுந்த நிலையில்) அடியில் இருந்து நுனி வரை பிடித்து அளப்பதன் மூலம் ஆண்குறியின் நீளத்தை(Length) தெரிந்து கொள்ளலாம். ஆண்குறியின் தண்டின் நடுவே அளவு நாடாவை சுற்றி அளப்பதன் மூலம் அதன் சுற்றளவை(Girth) அளக்கலாம்.

Popular posts from this blog

முதலிரவுக்கு முதல் நாள் இரவில் ஆண்கள் இதை செய்ய வேண்டும்

உங்களுக்கு சுய இன்பம் செய்யும் பழக்கம் உள்ளதா? சுய இன்பம் செய்யும் பழக்கம் குறைவான அல்லது, சுய இன்பம் செய்யும் பழக்கம் இல்லாத ஆண்கள் அவர்கள் முதலிரவு கொண்டாட முன்னர்  இதனை அவசியம் செய்ய வேண்டும். இல்லாவிட்டால், முதலிரவில் அதனால் கூட சீக்கிரம் விந்து வெளியேறி முதலிரவு ஆரம்பிக்க முன்னரே முடிந்து விடலாம். ஆண்களின் விதைகளில் விந்து நிறைந்து வழியும் நிலையில் அதனை ஆண்கள் வெளியேற்றாவிட்டால் அவை தூக்கத்தில் வெளியேற அதிக வாய்ப்பு உள்ளது. சுய இன்பம் செய்யும் பழக்கம் இல்லாத ஆண்கள், விதைகளில் விந்து நிறைந்து வழியும் நிலையில், ஆண்குறியில் இருந்து அதிகமாக விந்து(Precum/Semen) ஒழுகும் நிலையில் முதலிரவு அறைக்குள் நுழைந்தால், சீக்கிரம் விந்து வெளியேற்றம் நடைபெறலாம். அதே நேரம் விதைகளில் சேமிக்கப்பட்டுள்ள பழைய விந்துக்களை விட, புதிய விந்துக்களை வைத்து ஒரு பெண்ணை கருவுறச் செய்வதன் மூலமே ஆரோக்கியமான கருக்கட்டல் நடைபெறும். கருவூறும் வாய்ப்பும் அதிகமாக இருக்கும். ஆகவே தான் முதலிரவுக்கு முதல் நாள் இரவு ஆண்கள் சுய இன்பம் செய்து விந்து வெளியேற்றி, அடுத்த நாள் ஆட்டத்திற்கு தயாராக வேண்டும். மேலும் விபரமா...

மருத்துநீர் வைத்து குளிக்கும் போது செய்ய வேண்டியவை

சித்திரை புத்தாண்டு தினத்தில், ஆரோக்கியம் மற்றும் நீண்ட ஆயுளை வேண்டி, தலையில் வைத்து நீராடப்படும் மூலிகை கலந்த புனித நீர் மருத்துநீர் ஆகும். தமிழர்கள் சித்திரை வருடப்பிறப்பு அன்று மருத்துநீர் வைத்து நீராடுவது காலம்காலமாக கடைப்பிடிக்கும் முறையாகும். எனினும் மருத்து நீர் தேய்த்து குளிக்கும் வழக்கம் நம்ம ஊரில் ஒரு சிலரிடம்தான் உள்ளது தீபாவளிக்கு எண்ணெய் தேய்த்து குளிக்கிறது மாதிரி எல்லோரிடமும் இது அறிமுகமாகி இராத விஷயம் ஆகும். மருத்து நீர் என்பது தாழம்பூ, தாமரைப் பூ, மாதுளம் பூ, துளசி, விஷ்ணுக்கிரந்தி, சீதேவியார், செங்கழுநீர், வில்வம், அறுகு, பீர்க்கு, பால், கோசலம், கோமயம், கோரோசனை, மஞ்சள், மிளகு, திப்பிலி, சுக்கு இவைகளை சுத்தமாக நீரில் கொதிக்க வைத்து காய்ச்சி எடுப்பதாகும். எனினும் நடைமுறையில் சில பிரதேசங்களில் இவைகளைப் பெற்றுக்கொள்வது என்பது சாத்தியமில்லை என்பதால், இந்துக்கள், தமது வீடுகளுக்கு அருகில் கிடைக்கக்கூடிய அறுகு, துளசி, வேப்பிலை ஆகியவற்றை மஞ்சள், பால் கலந்த சுத்த நீரில் மிளகு, சுக்கு இட்டு, நன்கு கொதிக்க வைத்து காய்ச்சி சிரசிலும், பாதத்திலும் வைத்து  நீராடுவது  உசிதமாக...

சாமுத்ரிகா லக்ஷணம் கூறும் ஆண்களின் மூன்று வகை ஆண்குறிகள்

பொதுவாக ஆண்களை சாமுத்திரிகா லட்சணத்தின்படி, மூன்று வகைகளாகப் பிரித்திடுவர். ஓர் ஆண் இம்மூவகைகளில், எவ்வகையைச் சேர்ந்தவர் என்பதை அந்த ஆணின் பிறப்புறுப்பின் நீளத்தைக் கொண்டு தெரிந்து கொள்ளலாம்.  முந்தைய காலங்களில் மட்டுமல்லாது, இன்றும் கூட திருமணப் பொருத்தம் பார்த்து, மணமகளுக்கும் மணமகனையும், மணமகனுக்கு மணமகளையும் தேர்வு செய்யும் வழக்கம் நடைமுறையில் இருந்து வருகிறது.  இவ்வாறு பொருத்தம் பார்க்கும் போது, பிற பொருத்தங்களுடன், வகைப் பொருத்தமும் பார்க்கப்படுகிறது. இந்த வகை ஆணுக்கு இந்த வகை பெண்ணையே தெரிவு செய்து மணமுடிக்க வேண்டும் என்று உறுதிபடக் கூறுவர். இவ்வாறு வகைப்பொருத்தம் சரியாக அமைந்திடுமானால், திருமணம் நடந்த பிறகு அத்தம்பதியரின் இல்வாழ்க்கையில் திருப்தியும், சுகமும், ஆனந்தமும் இருந்திடும். ஆண்களை மூன்று வகைகளாக பிரிக்கின்றனர்.  அவை முயல் சாதி வகை, காளைச் சாதி வகை, குதிரைச் சாதி வகை என்பனவாகும். முயல் சாதி வகை: செவ்வரி படர்ந்த கண்களையும், அரிசி முனை போன்ற வெண்மையான பற்களையும் பெற்றிருக்கும் முயல் சாதி ஆண்களின் முகம், பௌர்ணமி முழு நிலவைப் போன்று இருக்கும். இவர்களுடைய உள்ள...

திருமண தடை நீங்க ஆண்கள் செய்ய வேண்டிய கோயில் பரிகாரங்கள்

கோயில் பரிகாரங்கள் ஜாதகத்தில் உள்ள கிரக தோஷங்கள், வாஸ்து பிரச்சனைகள் மற்றும் திருமண/புத்திர தடையை நீக்கி, வாழ்வில் சுபிட்சத்தை நிலைநாட்ட உதவுகின்றன. உதாரணமாக திருநள்ளாறு (சனி), திருப்பாம்புரம் (ராகு-கேது), திருவாலங்காடு (சிவன்) போன்ற தலங்களில் உங்கள் ஜென்ம நட்சத்திர நாளில் சிறப்புப் பூஜைகள் மற்றும் அர்ச்சனை செய்வது தோஷ நிவர்த்தி தரும் முக்கிய பரிகாரங்களாகும். இவ்வாறு பரிகாரங்களுக்கென குறிப்பிட்ட இந்து ஆலயங்கள் இருப்பது ஏன்? அந்த பரிகாரங்களை செய்ய வருபவர்கள் ஒரே தோஷமுடைய மணமகன், மணமகளை சந்திக்கக் கூடிய வாய்ப்பினை இது உருவாக்கக் கூடியதாக இருப்பதனால் ஆகும். ஒரே வகையான தோஷமுள்ள ஆணுக்கும் பெண்ணுக்கும் திருமணம் செய்து வைத்தால் தோஷம் கழிந்து விடும் என்பது நம்பிக்கை. அதற்காக கட்டாயம் இந்த ஆலயங்களில் மாத்திரம் தான் இவ்வாறான சிறப்பு பூஜைகள் செய்ய வேண்டும் என்றில்லை. ஆறு, கடல், குளம், கேணி போன்ற நீர் நிலைகளை அண்டி உள்ள சிவன் கோயில்களில் கூட இந்த பரிகார பூஜைகளை செய்யலாம். இவ்வாறான பரிகார பூஜைகளை செய்வதற்கு ஆண்கள் தனிமையில் செல்வது சிறந்ததாகும். முதலில் கோயிலின் அருகில் உள்ள அந்த நீர் நிலைகளில் தலை...

ஜாதகத்தில் தோஷம் இருந்தால் திருமண வாழ்க்கை தள்ளிப் போகலாம்

தோஷம் உள்ள ஜாதகர்கள் என்னதான் காதலித்து இளவயதிலேயே திருமணம் செய்தாலும் அவர்களின் திருமண வாழ்க்கை ஏதாவது ஒரு காரணத்தினால் இடையிலேயே முறிந்து விடலாம். இதன் காரணமாகவே ஜோதிடர்கள் 30 வயதிற்கு பின்னர் தோஷமுள்ள ஜாதகர்களுக்கு திருமணம் செய்ய பரிந்துரைக்கின்றனர். தோஷமுள்ள ஜாதகர், தோஷம் இல்லாத ஜாதகரை 30 வயதிற்கு முன்னர் காதலித்தால், அவர்களின் திருமணத்தை தோஷமுள்ளவரின் 30 வயதிற்கு பின்னர் நிகழ்த்துவது உகந்தது. தோஷம் உள்ள ஜாதகர்கள் தோஷம் இல்லாத ஜாதகர்களை 30 வயதிற்கு முன்னர் திருமணம் செய்தால், அவசியம் ஆணுறை அணிந்து உடலுறவு கொண்டு 30 வயதிற்குள் குழந்தை பெற்றுக் கொள்வதை தவிர்க்க வேண்டும். அதன் மூலம் திருமண வாழ்க்கையில் தடங்கல் ஏற்பட்டாலும் ஒரு குழந்தை தனித்து விடப்படமாட்டாது. தோஷம் இருந்தால் அதே தோஷம் உள்ளவர்களையே திருமணம் செய்ய வேண்டும். ஒருவருடைய ஜாதகத்தில் முக்கியமான தோஷங்கள் இருப்பதை எப்படி அறிந்து கொள்வது? ஜாதகம் என்பது ஒருவரது பிறந்த நேரம், திகதி, இடத்தின் அடிப்படையில் உருவாக்கப்படும் விண்மீன் நிலை வரைபடம். இதில், கிரகங்கள் எந்த ராசியில், எந்த பாவத்தில் இருக்கின்றன என்பதை வைத்து வாழ்க்கையில் ஏற்ப...