குழந்தை இல்லாத பெண்கள், மற்றும் மனநிலை பாதிக்கப்பட்ட பெண்களுக்கு இரவு பூஜைகள் நடத்தப்படுகிறது. சாமியார், அவருடைய நம்பிக்கைக்குரிய உதவியாளர் மற்றும் அந்தப் பெண் என மூவர் மட்டுமே இரவு பூஜையில் கலந்துகொள்ள முடியும். இரவு பூஜையில் பங்கேற்கும் பெண்ணின் மீது குளிர்ந்த நீரை குடம் குடமாக ஊற்றுகின்றனர். அதன் பிறகு ஒவ்வொரு ஆடையாக களைந்து விட்டு, நிர்வாணமாக இருக்கும் பெண்ணின் மீது எண்ணெய், சந்தனம், விபூதி என்று பலவற்றை சாமியாரும் அவருடைய உதவியாளரும் பூசுவார்களாம். இப்படிச் செய்யும் போது உணர்ச்சியால் தூண்டப்படும் அந்தப் பெண்ணிடம் சாமியாரும் அவருடைய உதவியாளரும் தங்களின் காம இச்சையை தீர்த்துக் கொள்வதில் பெரிய சிக்கல் இருக்காதாம். இதனால் கணவனுக்கு இருக்கும் பிரச்சனையால் குழந்தை பெற்றுக்கொள்ள முடியாத பெண்கள், சாமியாரிடம் அடிக்கடி வரும் பட்சத்தில் அவர்களுக்கு குழந்தையும் பிறந்துவிடுகிறது. அவர்கள் மூலம் சாமியாருக்கு விளம்பரமும் கிடைக்கிறது. யாராவது ஒரு பெண் இரவு பூஜையில் ஒத்துழைக்க மறுத்து பிரச்சனை செய்யும் போதுதான், சாமியாரின் வேடம் வெளி உலகுக்குத் தெரிய வருகிறது. பில்லி சூன்யம், ஏவல், பெண்க...
திருமணமாகி நீண்ட காலமாக குழந்தை இல்லாமல் அவஸ்தைப்படும் கணவனும் மனைவியும் செய்ய வேண்டிய இந்த லஜ்ஜா கௌரி நிர்வாண பூஜை மூலம் குழந்தை வரத்தை சீக்கிரம் பெற முடிவதோடு, கடவுளின் அருளால் குழந்தைகளின் வாழ்க்கையை முன்னேற்றக் கூடியதாகவும் இருக்கும். லஜ்ஜா கௌரி(Lajja Gauri) என்பது இந்து சமயத்தில் செழிப்பு, உற்பத்தித் திறன், மற்றும் பேறுபேறு(Fertility) ஆகியவற்றுக்கான ஆதிசக்தி அல்லது பார்வதியின் ஒரு சக்திவாய்ந்த வடிவம் ஆகும். இந்த தெய்வத்தின் சிலையில் அம்மனின் தலைக்குப் பதிலாக மலர்ந்த தாமரை மலர் இருக்கும். தாமரை என்பது தூய்மை, செல்வம் மற்றும் படைப்பு ஆற்றலைக் குறிக்கிறது. கால்களை அகல விரித்து, முழங்கால்களை மடக்கிய பிரசவ நிலையில் அமர்ந்த கோலத்தில் காணப்படுவார். இது பிரசவத்தைக் குறிக்கும் நிலையாகும். இது அவமானம் அல்ல. பிரபஞ்சத்தின் படைப்புச் சக்தியையும், பூமித்தாயின் வளமையையும் குறிக்கும் நிலையாகும். சாக்தம் மற்றும் ஸ்ரீ வித்யா தந்திரத்தில் இவளது வழிபாடு மிக இரகசியமானதாகவும், சக்தி வாய்ந்ததாகவும் கருதப்படுகின்றது. குழந்தை வரம் வேண்டுபவர்களும், விவசாயச் செழிப்பு மற்றும் செல்வ வளம் கோருபவர்களும் இவர...