திருமணமாகி நீண்ட காலமாக குழந்தை இல்லாமல் அவஸ்தைப்படும் கணவனும் மனைவியும் செய்ய வேண்டிய இந்த லஜ்ஜா கௌரி நிர்வாண பூஜை மூலம் குழந்தை வரத்தை சீக்கிரம் பெற முடிவதோடு, கடவுளின் அருளால் குழந்தைகளின் வாழ்க்கையை முன்னேற்றக் கூடியதாகவும் இருக்கும்.
லஜ்ஜா கௌரி(Lajja Gauri) என்பது இந்து சமயத்தில் செழிப்பு, உற்பத்தித் திறன், மற்றும் பேறுபேறு(Fertility) ஆகியவற்றுக்கான ஆதிசக்தி அல்லது பார்வதியின் ஒரு சக்திவாய்ந்த வடிவம் ஆகும்.
இந்த தெய்வத்தின் சிலையில் அம்மனின் தலைக்குப் பதிலாக மலர்ந்த தாமரை மலர் இருக்கும். தாமரை என்பது தூய்மை, செல்வம் மற்றும் படைப்பு ஆற்றலைக் குறிக்கிறது. கால்களை அகல விரித்து, முழங்கால்களை மடக்கிய பிரசவ நிலையில் அமர்ந்த கோலத்தில் காணப்படுவார். இது பிரசவத்தைக் குறிக்கும் நிலையாகும். இது அவமானம் அல்ல. பிரபஞ்சத்தின் படைப்புச் சக்தியையும், பூமித்தாயின் வளமையையும் குறிக்கும் நிலையாகும்.
சாக்தம் மற்றும் ஸ்ரீ வித்யா தந்திரத்தில் இவளது வழிபாடு மிக இரகசியமானதாகவும், சக்தி வாய்ந்ததாகவும் கருதப்படுகின்றது. குழந்தை வரம் வேண்டுபவர்களும், விவசாயச் செழிப்பு மற்றும் செல்வ வளம் கோருபவர்களும் இவரை வழிபடுகிறார்கள்.
இவளது மூல மந்திரம்: “ஓம் ஹ்ரீம் லஜ்ஜா கௌர்யை நமஹ”
திருமணமான ஆணும் பெண்ணும் குழந்தை வரம் வேண்டி எவ்வாறு இந்த தந்திர வழிபாடு செய்வது?
லஜ்ஜா கௌரி படத்தை விரும்பினால் மஞ்சளோடு பயன்படுத்தலாம். கணவன் மனைவி எதிர் எதிரே நிர்வாணமாக உட்கார்ந்து குறைந்தது அரை மணி நேரம் பூசை செய்ய வேணும்.
கீழே கொடுத்துள்ள முறைப்படி லஜ்ஜா கௌரி நிர்வாண பூஜை செய்யலாம். பூசை முடிவில் கண்ணை மூடி நினைத்தை பிரார்த்திக்க வேணும். தினமும் இல்லாவிட்டாலும் வெள்ளிக்கிழமை வெள்ளிக்கிழமை தவறாது செய்ய பலன் சீக்கிரம் தெரியும். இதன் மூலம் கணவன், மனைவி உறவு பலப்படும். குழந்தைகள் முனேற்றம் உண்டாகும். உலகில் வெற்றி கிட்டும்.
பூஜை சுலோகம், முதலில் ஆவாகனம் பின்னர் அர்ச்சனை
ஓம் க்லீம் சுரசுந்தர்யை நம: குறைந்தது 21 தடவை பூவினால் அர்ச்சனை செய்ய வேண்டும். 108 தடவை செய்வது நல்லது.
ஓம் மங்கள மாயி நம: 21 அல்லது 108 தடவை பூவினால்
ஓம் சௌக்கிய, சுக, வித்யா, ஐஸ்வர்ய தாயின்யை நம: 21 அல்லது 108 தடவை குங்குமத்தால்
பின்னர் “ஓம் ஹ்ரீம் லஜ்ஜா கௌர்யை நமஹ” என்னும் மூல மந்திரத்தை பூஜை முடியும் வரை சொல்ல வேண்டும்.
இந்த பூஜையை நள்ளிரவில் செய்வது சிறந்தது. பூஜை செய்ய பலன் கிடைக்கும் மஞ்சள் மாயி துணை புரிவாள்.
கணவனும் மனைவியும் தவறாது இந்த பூஜை செய்தால் மாத்திரம் போதாது, மனைவிக்கு கருமுட்டை வெளியேறும் நாள் பார்த்து அந்த நாட்களில் தொடர்பு உடலுறவு கொள்ள வேண்டும்.
Keywords: லஜ்ஜா கௌரி நிர்வாண வழிபாடு


