Skip to main content

Translate Blog

களவும் கற்று மற

பார்வையாளர் கவனத்திற்கு: இந்த இணையத்தளப்பதிவினை உங்கள் சுய விரும்பின் பெயரில் நீங்கள் பார்வையிடுகிறீர்கள். சில வேளைகளில் இங்கு கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் உங்கள் தேவைக்கு அதிகமாக, உங்களை அசெளகரியத்திற்குள்ளாக்குவதாக இருக்கலாம். உங்களுக்கு இருக்கும் சந்தேகங்கள், கேள்விகள் மற்றும் ஏனைய உதவிகளுக்கு Support யை நாடவும்.


பெண்ணின் சாமுத்ரிகா லக்ஷ்ணம் எப்படி இருக்கவேண்டும்?

ஒரு பெண் எப்படியிருக்க வேண்டும் என்று நம் முன்னோர்கள் வகுத்து வைத்துள்ளனர். எல்லா பெண்களுக்கும் சாமுத்திரிகா லட்சணப்படி எல்லா அவயங்களும் அமைவதில்லை. அமைந்தால் கொள்ளையோ... கொள்ளைதான். ஒரு இளம் பெண்ணுக்கு உச்சி முதல் பாதம் வரை உள்ள பகுதிகள் எப்படி இருக்க வேண்டும் என்று முன்னோர்கள் வகுத்து கூறியுள்ளார்கள். அதுதான் சாமுத்திரிகா லட்சணம்.சாமுத்திரிகா லட்சணப்படி ஒரு பெண்ணுக்கு அழகு பாகங்கள் எப்படி இருக்க வேண்டும்?

Manly Topics Blog
1. கால், பாதம்:
ஒரு பெண்ணின் பாதம் செந்தாமரைப் பூப்போன்று சிவப்பாக இருக்க வேண்டும். கால்களின் 5 விரல்களும் பூமியில் பதிய வேண்டும். 5 விரல்களும் ஒன்றோடொன்று பொருந்திய நிலையில் இருத்தல் வேண்டும். குதிகால் கொஞ்சம் அகலமாக மயிலிறகுபோல் அமைந்திருக்க வேண்டும்.

பாதங்களின் பெருவிரல் நீண்டிருந்தால் நல்லது. காலிலுள்ள நடுவிரலுக்கு அடுத்த விரல் ஒண்டிருந்தால் செல்வச் செழிப்புடன் வாழ்வாள். குதிகாலின் மேல் வெள்ளை மச்சம் இருந்தால் மகிழ்ச்சியாக வாழ்வாள். மேலும் பிரதானமாக கெண்டைக்கால் பருத்து இல்லாமல் இருப்பது நலம் ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் இடை குறுகி இருப்பது நலம் அதுபோல் இருப்பவர்கள் ஆரோக்கியமாகவும் அதிர்ஷ்டசாலியாகவும் இருப்பார்கள். சில பெண்களுடைய கால் விரலில் சுண்டு விரல் மட்டும் தரையில் படாமல் மேலே தூக்கியவாறு இருக்கும். அவ்வாறு இருந்தால் அந்த பெண் குடும்ப வாழ்க்கைக்கே ஒத்து வராது எவ்வளவு இருந்தாலும் கணவரை ஒன்றுமில்லாமல் செய்துவிடும் என்று சொல்லப்படுகிறது. காலின் கட்டை விரல் வளைந்தும் மற்றொன்று வளையாமலும் இருக்கும். அப்படி இருந்தால் அந்த பெண்ணுக்கு இரண்டு கணவர் என்று அர்த்தம். அது அங்கீகாரத்துடனும் இருக்கலாம் இல்லாமலும் இருக்கலாம்.

2. தொடை:
பெண்களின் தொடை வாழைத்தண்டுபோல் பளபள என்று இருக்க வேண்டும். முழங்கால் சிறிதாக இருக்க வேண்டும். பெண்களின் தொடை உரோமம் இல்லாமல் பளிச்சென்று காட்சி தர வேண்டும்.

3. இடை:
இளம் பெண்ணின் இடை நடுவில் சிறுத்தும் மேலும் கீழும் விரிந்திருக்க வேண்டும். ஆலிலைப்போல் வயிறு அமைந்திருந்தால் அழகு. வயிறு நல்ல வெள்ளித் தட்டுப்போல் இருந்து தொப்புள் வலது பக்கமாக சுழித்திருந்தாலும் செல்வம் பெருகும்.

4. மார்பகங்கள்:
பெண்ணின் மார்பகங்கள் ஒன்றோடொன்று நெருக்கமாக தோன்ற வேண்டும். அத்துடன் மார்பகங்கள் நிமிர்ந்தும் நீண்டும் காட்சி தர வேண்டும்.

5. கைவிரல்:
பெண்ணின் கைகள் கொளுத்த மீன் போல் சிவப்பாக இருத்தல் வேண்டும். கைவிரல்கள் பயித்தங்காய்போல் அழகாக காட்சி தர வேண்டும்.

6. கழுத்து:
பெண்ணின் முகம் முழு நிலவுபோல ஒளிமிக்கதாக விளங்க வேண்டும். பெண்ணின் தடுகள் உருண்டு திரண்டு பவளம் போலிருந்தால் அழகு. பெண்ணின் பல் வரிசை முத்துக்களைக் கோர்த்தது போல வரிசையாக இருக்க வேண்டும்.

7. கண்கள்:
பெண்களின் கண்கள் சிவந்து நீண்டு அடிக்கண் அகன்று, மாவடு போல இருக்க வேண்டும்.. பாலில் விழுந்த வண்டுபோல கண்கள் துள்ள வேண்டும். கரிய விழிகளில் செவ்வரி ஓடியிருக்க வேண்டும். பெண்களுக்கு புருவம் வில்லைப்போல் வளைந்திருக்க வேண்டும். உருண்டு திரண்ட கண்கள் அதிர்ஷ்டத்தின் அடையாளம் என்று சொல்வார்கள். சற்றே உருண்டு திரண்ட விழிகள்தான் அதற்காக ரொம்பவும் பெரிய விழிகள் அல்ல.மான் விழி என்று சொல்வார்கள் மருளக் கூடிய பார்வை கொண்டவர்கள் கணவருக்கு ஏற்றவராகவும் எல்லா இடத்திலும் நேர்மறை சிந்தனை கொண்டவராகவும் இருப்பார்கள். மருண்ட விழிகளில் சில அமைப்புகள் உண்டு. உருண்ட விழி அதிர்ஷ்டம் மருண்ட விழி கணவருக்கு நல்லதாக இருக்கும் பரந்த விழிகள் பிறரை எளிதில் கவரக்கூடியதாகவும் பெரிய துறையில் பெரிய பதவியில் அமரக்கூடியவராகவும் இருப்பார்கள். விழிகளை விட விழித்திரை ரொம்ப முக்கியம். விழித்திரை வெள்ளையாக இருக்கிறதா அல்லது மஞ்சளாக இருக்கிறதா என்று பார்க்க வேண்டும். உருண்ட விழியின் பின்னணி வெள்ளையாக இருந்தால் அவர்கள் திருட்டுத் தனம் செய்பவர்களாக இருப்பார்கள்.சிவந்த விழித்திரையைக் கொண்ட பெண்கள் பிழைக்கத் தெரியாதவர்கள் என்று சொல்வார்களே… அதுபோல இருப்பார்கள். மஞ்சள் பின்னணியில் பரந்த விழியைக் கொண்டிருப்பது கொஞ்சம் பயங்கரமானது. வாழ்க்கையில் பெரிய ஏற்ற இறக்கங்களை சந்திப்பார்கள். விழி மற்றும் விழிப்பின்னணி இமைகள் போன்றவை பற்றி சொல்லப்படுகிறது. இமையில் இருக்கும் முடிகள் அடர்த்தியாக இருக்கக் கூடாது. அவ்வாறு இருந்தால் ஆயுள் குறைவு ஏற்படும். அடர்த்தி இல்லாமல் பரவலாக இருந்தால் ஆயுள் நிறைந்து இருக்கும்.வளையக்கூடிய புருவங்கள் மிகப்பெரிய பதவியில் உட்காருவார்கள். இசையில் ஆர்வம் இருக்கும். முண்டக் கண்ணி என்று சொல்லப்படும் கண்கள் உள்ளவர்களுக்கு தாய் தந்தையில் யாராவது ஒருவர் இருக்க மாட்டார்கள். சிறிய வயதிலேயே பெற்றோரில் ஒருவரை இழந்துவிடுவார்கள்.உள்ளுக்குள் இருக்கும் கண்கள் கொண்டவர்கள் ரொம்ப அப்பாவியாக இருப்பார்கள். பின்னர் செழிப்பாக இருப்பார்கள் 30 வயது வரை காசை செலவு செய்துவிட்டு பின்னர் பணத்தை சரியாக கையாள்வார்கள்.

8. கூந்தல்:
பெண்களின் கூந்தல் நீண்ட கருங்கூந்தலாக இருக்க வேண்டும். பெண்களின் கூந்தலில் மலர் மணம் வீச வேண்டும். கோர முடி குடியைக் கெடுக்கும் சுருட்டை சோறு போடும்” என்று சொல்வார்கள்.அதாவது சுருட்டை முடி கொண்டவர்கள் எல்லோரையும் வைத்து சோறு போடுபவர்களாகவும் சுற்றுத்தார் நண்பர்களை மிகவும் நேசிப்பவர்களாகவும் இருப்பார்கள். அரவணைக்கும் தன்மை கொண்டவர்களாக இருப்பார்கள். கோரை முடி கொண்டவர்கள் தாய் தந்தையை கஷ்டப்படுத்துபவர்களாகவும் குடும்பத்திற்கு கெட்ட பெயரை கொடுப்பவர்களாகவும் இருப்பார்கள். கலப்பினத்தில் திருமணம் முடிப்பார்கள்.ரோமக் கால்கள் எந்த அளவிற்கு மென்மையாக இருக்கிறதோ அந்த அளவிற்கு வாழ்க்கை மென்மையாக இருக்கும். ரொம்ப கஷ்டப்படாமல் அமைதியாக வீட்டிலேயே இருந்தபடி வாழ்க்கை நடத்தும் யோகம் கிட்டும். கடினமான மொரமொரவென்று இருக்கும் தலை முடி உள்ளவர்களுக்கு கஷ்ட ஜீவனம் இருக்கும். உழைத்து சாப்பிட வேண்டிய நிலை ஏற்படும். அவர்களது முடி போன்றுதான் வாழ்க்கையும் அமையும். 9. வாசம்: பெண்களின் உடம்பில் கற்பூர வாசனை, சந்தன வாசனை, தென்னம்பாளை வாசனை, இலுப்பைப்பூ வாசனை, எலுமிச்சை வாசனை, தாழம்பூ வாசனை, தாமரைப்பூ வாசனை ஆகியவை முன் பக்கமும், பின் பக்கமும் வருமானால் செல்வச் செழிப்புடன் வாழ்வாள்.

10. மூக்கு:
மூக்கு உயர்ந்து காணப்படுவது நலம். மூக்கின் நுனி அமைப்புதான் முக்கியமாக சொல்லப்படுகிறது. மூக்கின் நுனி கூராக இருந்தால் அதி புத்திசாலி அரசாளும் யோகம் அமைச்சராதல் போன்ற யோகம் உண்டு. எலியைப் போன்ற மூக்கு அதாவது லேசாக தூக்கிய படி இருந்தால் காம உணர்வு அதிகமாக இருக்கும் என்பார்கள். ஒரு சிலருக்கு மூக்கின் நுனிப் பகுதி உருண்டு காணப்படும். அவர்கள் புத்திசாலியாக இருப்பார்கள். பயன்படுத்திவிட்டு தூக்கி எறியும் குணம் இருக்கும சந்தைப்படுத்துதல் துறையில் சிறந்து விளங்குவார்கள். சிலர் மூக்கு மண்ட மூக்கு என்று சொல்வது போல் இருக்கும். அவர்கள் மற்றவர்களை இம்சைப்படுத்துவார்கள். சிலருக்கு மூக்கு கொடை மிளகாய் போல் இருக்கும். அவர்களும் மற்றவர்களது உணர்வுகளை புரிந்து கொள்ளாமல் அடக்கி ஆள முயற்சிப்பார்கள். மூக்கின் அடிப்பகுதி நடுப்பகுதி நுனிப் பகுதி என மூன்று அமைப்பையும் வைத்து சொல்லப்படுகிறது. ஒரே சீரான மூக்கைக் கொண்டவர்களுக்கு சீரான வாழ்க்கை இருக்கும்.கொடை மிளகாய் மூக்குக் கொண்டவர்கள் தான் கொஞ்சம் பயங்கரமானவர்கள்.ஒரு சிலருக்கு அடிப்பகுதி ஒரு மாதிரி இருக்கும் நடுப்பகுதி வேறு மாதிரி இருக்கும் நுனிப்பகுதி வேறு ஒரு மாதிரி இருக்கும். இவர்களுக்கு மாறுபட்ட சிந்தனை இருக்கும். மூக்கு பார்க்கும்போதே வளைந்து நெளிந்து இருக்கும். வாசிம் யோகம்… வாசிம் என்றால் மூக்கு பயிற்சி செய்வதை குறிக்கும். அதாவது சித்தர்கள் மூக்கு பயிற்சி செய்வார்கள். அவர்களுக்கு கிட்டத்தட்ட பென்சில் போல் இருக்கும் மூக்கு. அதுபோன்ற மூக்கு இருந்தால் பிரணயாமம் வாசியாம் செய்பவர்கள் என்பதை அறிந்துக் கொள்ளலாம். அந்த மாதிரி மூக்கு அமைப்பு இருந்தால் எதிர்காலத்தைப் பற்றி அறிவும் திறன் கொண்டவர்களாக இருப்பார்கள் என்று சொல்வார்கள்.

10. நெற்றி:
சாமுத்ரிகா லட்சணத்தில் நெற்றி மிக முக்கியமான இடத்தில் உள்ளது.உயர்ந்த நெற்றி அறிவின் அடையாளம். கொஞ்சம் மேடாக பரந்து இருந்தால் சிறப்பாக இருக்கும். நெற்றியின் பரந்து விரிந்த அமைப்பைவிட அதில் உள்ள கோடுகளுக்குத்தான் மிக முக்கியம். 2 அல்லது 3 கோடுகள் இருப்பது நலம். பலதரப்பட்ட சிந்தனை அறிவு கொண்டவர்களாக இருப்பார்கள். அதற்குமேல் இருப்பது நல்லதற்கல்ல.

செவியின் அதாவது காதின் அமைப்பு பரந்து விரிந்து இருக்க வேண்டும். செவி குறுக குறுக மனநிலையும் குறுகி இருக்கும். சிந்தனையும் குறுகலாக இருக்கும்.

Popular posts from this blog

முதலிரவுக்கு முதல் நாள் இரவில் ஆண்கள் இதை செய்ய வேண்டும்

உங்களுக்கு சுய இன்பம் செய்யும் பழக்கம் உள்ளதா? சுய இன்பம் செய்யும் பழக்கம் குறைவான அல்லது, சுய இன்பம் செய்யும் பழக்கம் இல்லாத ஆண்கள் அவர்கள் முதலிரவு கொண்டாட முன்னர்  இதனை அவசியம் செய்ய வேண்டும். இல்லாவிட்டால், முதலிரவில் அதனால் கூட சீக்கிரம் விந்து வெளியேறி முதலிரவு ஆரம்பிக்க முன்னரே முடிந்து விடலாம். ஆண்களின் விதைகளில் விந்து நிறைந்து வழியும் நிலையில் அதனை ஆண்கள் வெளியேற்றாவிட்டால் அவை தூக்கத்தில் வெளியேற அதிக வாய்ப்பு உள்ளது. சுய இன்பம் செய்யும் பழக்கம் இல்லாத ஆண்கள், விதைகளில் விந்து நிறைந்து வழியும் நிலையில், ஆண்குறியில் இருந்து அதிகமாக விந்து(Precum/Semen) ஒழுகும் நிலையில் முதலிரவு அறைக்குள் நுழைந்தால், சீக்கிரம் விந்து வெளியேற்றம் நடைபெறலாம். அதே நேரம் விதைகளில் சேமிக்கப்பட்டுள்ள பழைய விந்துக்களை விட, புதிய விந்துக்களை வைத்து ஒரு பெண்ணை கருவுறச் செய்வதன் மூலமே ஆரோக்கியமான கருக்கட்டல் நடைபெறும். கருவூறும் வாய்ப்பும் அதிகமாக இருக்கும். ஆகவே தான் முதலிரவுக்கு முதல் நாள் இரவு ஆண்கள் சுய இன்பம் செய்து விந்து வெளியேற்றி, அடுத்த நாள் ஆட்டத்திற்கு தயாராக வேண்டும். மேலும் விபரமா...

மருத்துநீர் வைத்து குளிக்கும் போது செய்ய வேண்டியவை

சித்திரை புத்தாண்டு தினத்தில், ஆரோக்கியம் மற்றும் நீண்ட ஆயுளை வேண்டி, தலையில் வைத்து நீராடப்படும் மூலிகை கலந்த புனித நீர் மருத்துநீர் ஆகும். தமிழர்கள் சித்திரை வருடப்பிறப்பு அன்று மருத்துநீர் வைத்து நீராடுவது காலம்காலமாக கடைப்பிடிக்கும் முறையாகும். எனினும் மருத்து நீர் தேய்த்து குளிக்கும் வழக்கம் நம்ம ஊரில் ஒரு சிலரிடம்தான் உள்ளது தீபாவளிக்கு எண்ணெய் தேய்த்து குளிக்கிறது மாதிரி எல்லோரிடமும் இது அறிமுகமாகி இராத விஷயம் ஆகும். மருத்து நீர் என்பது தாழம்பூ, தாமரைப் பூ, மாதுளம் பூ, துளசி, விஷ்ணுக்கிரந்தி, சீதேவியார், செங்கழுநீர், வில்வம், அறுகு, பீர்க்கு, பால், கோசலம், கோமயம், கோரோசனை, மஞ்சள், மிளகு, திப்பிலி, சுக்கு இவைகளை சுத்தமாக நீரில் கொதிக்க வைத்து காய்ச்சி எடுப்பதாகும். எனினும் நடைமுறையில் சில பிரதேசங்களில் இவைகளைப் பெற்றுக்கொள்வது என்பது சாத்தியமில்லை என்பதால், இந்துக்கள், தமது வீடுகளுக்கு அருகில் கிடைக்கக்கூடிய அறுகு, துளசி, வேப்பிலை ஆகியவற்றை மஞ்சள், பால் கலந்த சுத்த நீரில் மிளகு, சுக்கு இட்டு, நன்கு கொதிக்க வைத்து காய்ச்சி சிரசிலும், பாதத்திலும் வைத்து  நீராடுவது  உசிதமாக...

சாமுத்ரிகா லக்ஷணம் கூறும் ஆண்களின் மூன்று வகை ஆண்குறிகள்

பொதுவாக ஆண்களை சாமுத்திரிகா லட்சணத்தின்படி, மூன்று வகைகளாகப் பிரித்திடுவர். ஓர் ஆண் இம்மூவகைகளில், எவ்வகையைச் சேர்ந்தவர் என்பதை அந்த ஆணின் பிறப்புறுப்பின் நீளத்தைக் கொண்டு தெரிந்து கொள்ளலாம்.  முந்தைய காலங்களில் மட்டுமல்லாது, இன்றும் கூட திருமணப் பொருத்தம் பார்த்து, மணமகளுக்கும் மணமகனையும், மணமகனுக்கு மணமகளையும் தேர்வு செய்யும் வழக்கம் நடைமுறையில் இருந்து வருகிறது.  இவ்வாறு பொருத்தம் பார்க்கும் போது, பிற பொருத்தங்களுடன், வகைப் பொருத்தமும் பார்க்கப்படுகிறது. இந்த வகை ஆணுக்கு இந்த வகை பெண்ணையே தெரிவு செய்து மணமுடிக்க வேண்டும் என்று உறுதிபடக் கூறுவர். இவ்வாறு வகைப்பொருத்தம் சரியாக அமைந்திடுமானால், திருமணம் நடந்த பிறகு அத்தம்பதியரின் இல்வாழ்க்கையில் திருப்தியும், சுகமும், ஆனந்தமும் இருந்திடும். ஆண்களை மூன்று வகைகளாக பிரிக்கின்றனர்.  அவை முயல் சாதி வகை, காளைச் சாதி வகை, குதிரைச் சாதி வகை என்பனவாகும். முயல் சாதி வகை: செவ்வரி படர்ந்த கண்களையும், அரிசி முனை போன்ற வெண்மையான பற்களையும் பெற்றிருக்கும் முயல் சாதி ஆண்களின் முகம், பௌர்ணமி முழு நிலவைப் போன்று இருக்கும். இவர்களுடைய உள்ள...

திருமண தடை நீங்க ஆண்கள் செய்ய வேண்டிய கோயில் பரிகாரங்கள்

கோயில் பரிகாரங்கள் ஜாதகத்தில் உள்ள கிரக தோஷங்கள், வாஸ்து பிரச்சனைகள் மற்றும் திருமண/புத்திர தடையை நீக்கி, வாழ்வில் சுபிட்சத்தை நிலைநாட்ட உதவுகின்றன. உதாரணமாக திருநள்ளாறு (சனி), திருப்பாம்புரம் (ராகு-கேது), திருவாலங்காடு (சிவன்) போன்ற தலங்களில் உங்கள் ஜென்ம நட்சத்திர நாளில் சிறப்புப் பூஜைகள் மற்றும் அர்ச்சனை செய்வது தோஷ நிவர்த்தி தரும் முக்கிய பரிகாரங்களாகும். இவ்வாறு பரிகாரங்களுக்கென குறிப்பிட்ட இந்து ஆலயங்கள் இருப்பது ஏன்? அந்த பரிகாரங்களை செய்ய வருபவர்கள் ஒரே தோஷமுடைய மணமகன், மணமகளை சந்திக்கக் கூடிய வாய்ப்பினை இது உருவாக்கக் கூடியதாக இருப்பதனால் ஆகும். ஒரே வகையான தோஷமுள்ள ஆணுக்கும் பெண்ணுக்கும் திருமணம் செய்து வைத்தால் தோஷம் கழிந்து விடும் என்பது நம்பிக்கை. அதற்காக கட்டாயம் இந்த ஆலயங்களில் மாத்திரம் தான் இவ்வாறான சிறப்பு பூஜைகள் செய்ய வேண்டும் என்றில்லை. ஆறு, கடல், குளம், கேணி போன்ற நீர் நிலைகளை அண்டி உள்ள சிவன் கோயில்களில் கூட இந்த பரிகார பூஜைகளை செய்யலாம். இவ்வாறான பரிகார பூஜைகளை செய்வதற்கு ஆண்கள் தனிமையில் செல்வது சிறந்ததாகும். முதலில் கோயிலின் அருகில் உள்ள அந்த நீர் நிலைகளில் தலை...

ஜாதகத்தில் தோஷம் இருந்தால் திருமண வாழ்க்கை தள்ளிப் போகலாம்

தோஷம் உள்ள ஜாதகர்கள் என்னதான் காதலித்து இளவயதிலேயே திருமணம் செய்தாலும் அவர்களின் திருமண வாழ்க்கை ஏதாவது ஒரு காரணத்தினால் இடையிலேயே முறிந்து விடலாம். இதன் காரணமாகவே ஜோதிடர்கள் 30 வயதிற்கு பின்னர் தோஷமுள்ள ஜாதகர்களுக்கு திருமணம் செய்ய பரிந்துரைக்கின்றனர். தோஷமுள்ள ஜாதகர், தோஷம் இல்லாத ஜாதகரை 30 வயதிற்கு முன்னர் காதலித்தால், அவர்களின் திருமணத்தை தோஷமுள்ளவரின் 30 வயதிற்கு பின்னர் நிகழ்த்துவது உகந்தது. தோஷம் உள்ள ஜாதகர்கள் தோஷம் இல்லாத ஜாதகர்களை 30 வயதிற்கு முன்னர் திருமணம் செய்தால், அவசியம் ஆணுறை அணிந்து உடலுறவு கொண்டு 30 வயதிற்குள் குழந்தை பெற்றுக் கொள்வதை தவிர்க்க வேண்டும். அதன் மூலம் திருமண வாழ்க்கையில் தடங்கல் ஏற்பட்டாலும் ஒரு குழந்தை தனித்து விடப்படமாட்டாது. தோஷம் இருந்தால் அதே தோஷம் உள்ளவர்களையே திருமணம் செய்ய வேண்டும். ஒருவருடைய ஜாதகத்தில் முக்கியமான தோஷங்கள் இருப்பதை எப்படி அறிந்து கொள்வது? ஜாதகம் என்பது ஒருவரது பிறந்த நேரம், திகதி, இடத்தின் அடிப்படையில் உருவாக்கப்படும் விண்மீன் நிலை வரைபடம். இதில், கிரகங்கள் எந்த ராசியில், எந்த பாவத்தில் இருக்கின்றன என்பதை வைத்து வாழ்க்கையில் ஏற்ப...