Skip to main content

Posts


Translate Blog

களவும் கற்று மற

பார்வையாளர் கவனத்திற்கு: இந்த இணையத்தளப்பதிவினை உங்கள் சுய விரும்பின் பெயரில் நீங்கள் பார்வையிடுகிறீர்கள். சில வேளைகளில் இங்கு கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் உங்கள் தேவைக்கு அதிகமாக, உங்களை அசெளகரியத்திற்குள்ளாக்குவதாக இருக்கலாம். உங்களுக்கு இருக்கும் சந்தேகங்கள், கேள்விகள் மற்றும் ஏனைய உதவிகளுக்கு Support யை நாடவும்.


ஆண்களின் நெஞ்சை வைத்து அவர்களை இப்படி எடை போடலாம்

பொதுவாகவே ஆண்கள் மேலாடை இன்றி இருப்பது சமூகத்தால் இயல்பான ஒன்றாக ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒன்றாகும். அதன் காரணமாகவே அநேகமான பாரம்பரியம், பழமை வாய்ந்த இந்துக் கோயில்களுக்குள் நுழைய முன்னர் ஆண்களின் மேலாடையை அகற்றும் சம்பிரதாயம் இன்றுவரை கடைபிடிக்கப்பட்டு வருகிறது. ஆண்களின் தோற்றத்தை வைத்து அவர்களின் குணத்தை ஓரளவுக்கு அறிந்து கொள்ளலாம் என்று பண்டைய நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த வகையில் ஆண்களின் நெஞ்சுப் பகுதியை வைத்து அவர்களை எப்படியெல்லாம் வகைப்படுத்தலாம், அவர்களின் குணம் எப்படி இருக்கும் என்று இந்தப் பதிவில் பார்ப்போம். ஆண்களின் நெஞ்சுப் பகுதியை அவற்றின் அமைப்பை வைத்து வகைப்படுத்தலாம். காடு போன்று முழுமையாக மறைக்கப்பட்ட நெஞ்சு முடி உள்ள ஆண்களின் நெஞ்சை Lion Heart(சிங்கத்தின் சிகை) என்பர். இவ்வாறான அமைப்பைக் கொண்ட ஆண்கள் காதலுக்காக உயிரைக் கூட கொடுப்பார்களாம்.

சீக்கிரம் கரு உண்டாக உடலுறவு கொள்வது எப்படி?

சீக்கிரம் குழந்தை பெற்றுக் கொள்ள விரும்பும் திருமணம் ஆனவர்கள் அவசியம் படிக்கவும். விருப்பமும், தேவையும் உடையவர்கள் மட்டும் தொடர்ந்து படிக்கவும். மற்றவர்கள் கடந்து போங்கள். கலவி எனும் உடலுறவை பற்றி பலருக்கும் குறிப்பாக இன்றைய தலை முறையினர்க்கு சரியான புரிதல் இல்லை. இன்று ஒரு ஊரில் ஒரு  தெருவுக்கு பத்து பேர் வரை திருமணம் ஆகி குழந்தை பாக்கியம் இல்லாமல் இருப்பதை காணலாம். அக்காலத்தில் ஒரு வீட்டுக்கு 5 குழந்தை முதல் 10 குழந்தை வரை சர்வ சாதாரணமாக பெற்றனர். ஆனால் இன்றோ ஒரு குழந்தையை பெறவே வழியின்றி கஷ்ட படுகின்றனர். இதற்கு பல காரணம் உண்டு இருப்பினும்  முக்கியமான சில விஷயங்களை கடை பிடித்தால் குழந்தை பாக்கியம் எளிதில் வாய்க்கும். பெண்கள் கடைபிடிக்க வேண்டியது: மலச்சிக்கல் இல்லாமல் பார்த்து கொள்ள வேண்டும். மிக முக்கியமாக உடற்சூடு இல்லாமல் இருக்க வேண்டும். அதீத இனிப்பு வகைள் எடுக்க கூடாது. அன்னாச்சி பழம் தவிர்க்க வேண்டும்.  கடுகை உணவில் எடுப்பதை தவிர்ப்பது நல்லது(கருவை சிதைக்கும் தன்மை உடையது). கணவரோடு உடலுறவு கொள்ளும் போது மலம், சிறுநீரை வயிற்றில் அடக்கி கொண்டு ஈடுபட கூடாது. கட்டிலை ...

சாமுத்திரிகா சாஸ்திரம் கூறும் ஒரு நல்ல பையனுக்கான பண்புகள்

திருமணத்திற்கு பெண் பார்க்கிறீர்களா? இந்த சமுத்திரிகா சாஸ்திரம் கூறும் இந்த 20 குணாதிசயங்களில் குறைந்தது 12 குணாதிசயங்கள் (லக்ஷனா) உள்ள ஒருவரை கண்டாலும் கண்ணை மூடிக்கொண்டு திருமணத்திற்கு சரி சொல்லி விடுங்கள்! உங்கள் பையனிடம் இந்த சமுத்திரிகா சாஸ்திரம் கூறும் குணங்கள் இருந்தால், அவர் திருமணத்திற்கு தயாராக உள்ளார் என்று அர்த்தம். திருமண வயதை ஒரு பெண் எட்டியவுடன், ஒவ்வொரு பெற்றோருக்கும், தங்கள் மகளுக்கு சரியான வாழ்க்கை துணையாய் தேடுவது என்பது ஒரு பெரும் கவலையாக மாறிவிடுகிறது. இது விளையாட்டு இல்லை அவர்கள் மகளின் வாழ்க்கையே இதில் தான் அடங்கி உள்ளது என்பது உண்மைதான். எனவே பெற்றோர்கள் ராஜா/ ராணிகளாக மாறி தங்கள் மகள்கள் ஆன இளவரசிகளுக்கு ஒரு சரியான இளவரசனைத் தேர்வுசெய்ய ‘சுயம்வரம்’ போல மணமகன்களை தேடுகின்றனர். உதாரணமாக, நாம் இந்து மதத்தைப் பார்க்கலாம், ராமாயணம் அல்லது மகாபாரதம், சீதா மற்றும் திரௌபதி ஆகியோரின் பெற்றோர்கள் தங்கள் மகள்களுக்கு பொருத்தமான துணையாய் தேர்ந்தெடுப்பதில் ஆழ்ந்த அக்கறை கொண்டிருந்தனர்; கௌரவர்கள் மற்றும் முனிவர்கள் கூட ஆழ்ந்த அக்கறை கொண்டிருந்தனர். அதைத் தொடர்ந்து சுயம்வர்கள்...

சாமுத்ரிகா லக்ஷணம் கூறும் நான்கு வகை பெண்கள்

"கொக்கோகம்" என்பது வடமொழியில் எழுதப்பட்ட ஓர் இன்பவியல் நூலாகும், இதைத் தமிழில் அதிவீரராம பாண்டியர் மொழிபெயர்த்துள்ளார். இந்த நூல் பாலியல் உறவு முறைகள் மற்றும் பெண்கள், ஆண்கள் பற்றிய தன்மைகள் பற்றி விவரிக்கிறது.   கொக்கோகம் பெண்களை அவர்களின் அழகு, குணநலன் ஆகியவற்றைக் கொண்டு நான்கு வகையாகப் பிரிக்கிறது. அவை பத்மினி, சித்தினி, சங்கினி, அத்தினி ஆகியவையாகும். பத்மினி: கற்பு நெறி தவறாதவளாகவும் கணவனிடம் மாறாத காதல் கொண்டவளாகவும், தெய்வபக்தியுள்ளவளாகவும் இருப்பாள். தன் கண் பார்வையால் உலகையே தன் வயப்படுத்துபவளாகவும், அன்ன நடையும், கொஞ்சும் குரலும், கொடியிடையும், மென்மையான தேகமும் கொண்டவள். இச்சாதிப் பெண்கள் இளம் சந்திரனைப் போன்ற முகமும், செவ்விதழ்களும், செந்தாமரை மலர்க்கண்களும், ஒன்றோடு ஒன்றிணைந்த மார்பகங்களும், ஒற்றை நாடி உடலும் கொண்டவர்கள். இவர்கள் எப்போதும் அனைவரிடமும் அன்பு செலுத்துபவர்களாகவும், வெண்மை நிற உடையும், வெண்மையான மலரும் விரும்பி அணிபவர்களாகவும் இருப்பார்கள். சுத்தமும், சுவையும்முள்ள உணவை மிதமாக உண்பார்கள். உரத்துப் பேசாத இனிமையான குரலை உடையவர்கள். சித்தினி:...

சாமுத்ரிகா லக்ஷணம் கூறும் நான்கு வகை ஆண்கள்

பெண்களைப் போலவே ஆண்களிலும் நான்கு வகையுண்டு. அவை முயல் சாதி (அ) உத்தம சாதி ஆண், மான் சாதி (அ) மத்திம சாதி ஆண், காளை சாதி (அ) அதம சாதி ஆண், குதிரை சாதி (அ) அதாகம சாதி ஆண் ஆகியவையாகும். முயல்சாதிஆண் அழகான உருண்டை முகமும், சிவந்த கண்களும், நடுத்தர உயரமும், மென்மையான உடல்வாகும் உள்ளவனாக இருப்பான். தெய்வ பக்தியும், மிகுந்த அன்பும், பெரியோரிடம் மரியாதையும், நல்லொழுக்கமும் கொண்டவன். சூடான உணவை குறைவாக உண்பவன். மான் சாதி: அழகிய முகமும், புன்னகை தவழும் உதடுகளும், பரந்த மார்பும், கடின உடல் வாகும் கொண்டவன். தெய்வ நம்பிக்கையுள்ளவன. பெரியோரை பெரிதும் மதிப்பவன், உண்மைக்குக் குரல் கொடுப்பவன், கண்டிப்பும் உறுதியும் உள்ளவன். காளை சாதி: மலர்ந்த முகம், அகன்ற நெற்றி, நீண்ட நாக்கு, சிவந்த பருத்த மேனி, சிறிய கால்கள் கொண்டவன். அதிக பசியால் நிறைய உண்பான். மனோதிடமும் தியாக உள்ளமும் உள்ளவன். பாவ புண்ணியங்களுக்கு அஞ்சாதவன். பிற பெண்களோடு அடிக்கடி உறவு கொள்வதில் மிகுந்த விருப்பமுள்ளவன். குதிரை சாதி: கறுத்த பருத்த உடல்வாகும், நீண்ட உதடுகளும், காதுகளும், நெடிய உருவமும் கொண்டவன். உஷ்ணமான தேகமும், தீராத க...

பெண்ணின் சாமுத்ரிகா லக்ஷ்ணம் எப்படி இருக்கவேண்டும்?

ஒரு பெண் எப்படியிருக்க வேண்டும் என்று நம் முன்னோர்கள் வகுத்து வைத்துள்ளனர். எல்லா பெண்களுக்கும் சாமுத்திரிகா லட்சணப்படி எல்லா அவயங்களும் அமைவதில்லை. அமைந்தால் கொள்ளையோ... கொள்ளைதான். ஒரு இளம் பெண்ணுக்கு உச்சி முதல் பாதம் வரை உள்ள பகுதிகள் எப்படி இருக்க வேண்டும் என்று முன்னோர்கள் வகுத்து கூறியுள்ளார்கள். அதுதான் சாமுத்திரிகா லட்சணம்.சாமுத்திரிகா லட்சணப்படி ஒரு பெண்ணுக்கு அழகு பாகங்கள் எப்படி இருக்க வேண்டும்? 1. கால், பாதம்: ஒரு பெண்ணின் பாதம் செந்தாமரைப் பூப்போன்று சிவப்பாக இருக்க வேண்டும். கால்களின் 5 விரல்களும் பூமியில் பதிய வேண்டும். 5 விரல்களும் ஒன்றோடொன்று பொருந்திய நிலையில் இருத்தல் வேண்டும். குதிகால் கொஞ்சம் அகலமாக மயிலிறகுபோல் அமைந்திருக்க வேண்டும். பாதங்களின் பெருவிரல் நீண்டிருந்தால் நல்லது. காலிலுள்ள நடுவிரலுக்கு அடுத்த விரல் ஒண்டிருந்தால் செல்வச் செழிப்புடன் வாழ்வாள். குதிகாலின் மேல் வெள்ளை மச்சம் இருந்தால் மகிழ்ச்சியாக வாழ்வாள். மேலும் பிரதானமாக கெண்டைக்கால் பருத்து இல்லாமல் இருப்பது நலம் ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் இடை குறுகி இருப்பது நலம் அதுபோல் இருப்பவர்கள் ஆரோக...

ஆணின் சாமுத்ரிகா லக்ஷணம் எப்படி இருக்க வேண்டும்?

1. தலை - ஆண்களின் தலையானது உயர்ந்தோ, பருத்தோ இருந்தால் செல்வம் உண்டு. பின் பகுதி புடைத்திருப்பின் அறிவு உண்டு. தலையின் நரம்புகள் புடைத்து இருப்பின் தரித்திரம். 2. நெற்றி - அகலமான, எடுப்பான, உயர்ந்த நெற்றி அமைந்திருப்பின் ஞானமும் செல்வமும் உண்டு. மிகச் சிறுத்திருப்பின் மூடனாவான். நெற்றியில் பல ரேகைகள் இருப்பின் அதிர்ஷடம் உண்டாகும். நெற்றியில் ரேகை இல்லா திருப்பின் ஆயுள் குறையும். நெற்றியில் வியர்வை வருமாயின் அதிர்ஷடமாம். 3. கண் - ஆண்களின் கண்கள் சிவந்து, விசாலமாக யானைக்கண் போல் இருந்தால் உலகை ஆள்வான். கோழி முட்டைக்கண்ணும், மிகச்சிறிய கண்ணும் இருப்பின் அறிவு, ஆற்றல் குறைவாக இருக்கும். 4. மூக்கு - உயரமாய், நீண்டு, கூரிய முனையோடு சிறிய நாசித் துவாரங்கள் கொண்ட மூக்கு உடையவர்கள் பணம், பதவி, புகழ் உடையவர்களாக இருப்பர். நுனிப் பகுதி தடித்தோ, நடுப்பகுதி உயர்ந்தோ, பெரிய அளவில் மூக்கு அமைந்திருப்பின் தரித்திரமாம்.