தோஷம் உள்ள ஜாதகர்கள் என்னதான் காதலித்து இளவயதிலேயே திருமணம் செய்தாலும் அவர்களின் திருமண வாழ்க்கை ஏதாவது ஒரு காரணத்தினால் இடையிலேயே முறிந்து விடலாம். இதன் காரணமாகவே ஜோதிடர்கள் 30 வயதிற்கு பின்னர் தோஷமுள்ள ஜாதகர்களுக்கு திருமணம் செய்ய பரிந்துரைக்கின்றனர். தோஷமுள்ள ஜாதகர், தோஷம் இல்லாத ஜாதகரை 30 வயதிற்கு முன்னர் காதலித்தால், அவர்களின் திருமணத்தை தோஷமுள்ளவரின் 30 வயதிற்கு பின்னர் நிகழ்த்துவது உகந்தது. தோஷம் உள்ள ஜாதகர்கள் தோஷம் இல்லாத ஜாதகர்களை 30 வயதிற்கு முன்னர் திருமணம் செய்தால், அவசியம் ஆணுறை அணிந்து உடலுறவு கொண்டு 30 வயதிற்குள் குழந்தை பெற்றுக் கொள்வதை தவிர்க்க வேண்டும். அதன் மூலம் திருமண வாழ்க்கையில் தடங்கல் ஏற்பட்டாலும் ஒரு குழந்தை தனித்து விடப்படமாட்டாது. தோஷம் இருந்தால் அதே தோஷம் உள்ளவர்களையே திருமணம் செய்ய வேண்டும். ஒருவருடைய ஜாதகத்தில் முக்கியமான தோஷங்கள் இருப்பதை எப்படி அறிந்து கொள்வது? ஜாதகம் என்பது ஒருவரது பிறந்த நேரம், திகதி, இடத்தின் அடிப்படையில் உருவாக்கப்படும் விண்மீன் நிலை வரைபடம். இதில், கிரகங்கள் எந்த ராசியில், எந்த பாவத்தில் இருக்கின்றன என்பதை வைத்து வாழ்க்கையில் ஏற்ப...
Samudrika Lakshanam is a Tamil blog based on the findings of the Indian practice of analyzing the physical features of men and women to predict their personality traits, behavior, companionship, sex life, marriage life, and destiny. Samudrika Shastra is considered one of the 64 arts in ancient Indian tradition and involves interpreting features such as facial structure, hands, and the entire body to gain insight into a person's life.