Skip to main content

Translate Blog

களவும் கற்று மற

பார்வையாளர் கவனத்திற்கு: இந்த இணையத்தளப்பதிவினை உங்கள் சுய விரும்பின் பெயரில் நீங்கள் பார்வையிடுகிறீர்கள். சில வேளைகளில் இங்கு கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் உங்கள் தேவைக்கு அதிகமாக, உங்களை அசெளகரியத்திற்குள்ளாக்குவதாக இருக்கலாம். உங்களுக்கு இருக்கும் சந்தேகங்கள், கேள்விகள் மற்றும் ஏனைய உதவிகளுக்கு Support யை நாடவும்.


தீட்டு, துடக்கு, ஆசௌசம் என்றால் என்ன?

தீட்டு என்றால் என்ன? "தீட்டு" என்கிற சொல் புரிந்துகொள்ளப்படாமலேயே காலங்காலமாக பெரும்பாலானோரால் கையாளப்பட்டு வருகிறது. இது குறித்த உண்மையான அர்த்தமுள்ள பார்வை அனைவருக்கும் தேவை. இறைவழிபாட்டில் விலக்க வேண்டிய தீட்டுக்கள் குறித்து இந்தப் பதிவு தெளிவுபடுத்தும் என நம்பலாம்.

தீட்டு என்பது என்ன? இறைவன் இருக்கும் இடத்தில் இந்தத் தீட்டுகள் ஆகாது! தீட்டு என்பது, தீண்டத் தகாததைத் தீண்டுவது. தீட்டுடன் இறைவனைக் கும்பிட்டால், இறைவன் ஏற்கமாட்டான் என்பார்கள்.

தீட்டுப் பட்டால் துடைத்து விடும், தீட்டுக் கூடாது என்பார்கள். ஆண், பெண் கலந்தாலும் தீட்டு, குழந்தைகள் பிறந்தாலும் தீட்டு, உடலுறவு கொண்டு அல்லது சுய இன்பம் செய்து விந்து வெளியேற்றினாலும் தீட்டு, ஆண்கள் தாடி/மீசை/அந்தரங்க முடியை மழித்தாலும் தலை முடி வெட்டினாலும் கூட தீட்டு, ஆண் வயதுக்கு வந்தாலும் தீட்டு, பெண் வயதுக்கு வந்தாலும் தீட்டு, பெண்கள் மாதவிடாயும் தீட்டு, இறந்தாலும் தீட்டு!

இப்படிப் பார்த்தால், தீட்டில் உருவான நமது உடலே ஒரு தீட்டு தானே! அதனால் தான் இறந்த பிறகு உடலைப் பிணம் என்று பெயர் வைத்துப் பிணத்தைத் தொட்டால் தீட்டு என்பார்கள். தீட்டுடைய இந்த உடலை வைத்து, எப்படிக் கடவுளை வழிபட முடியும்.?

சிந்தித்துப் பாருங்கள். இதுவல்ல உண்மையான தீட்டு. இவை நாம் சுகாதாரமாய் இருப்பதற்கு, இறைவனை பெயரைச் சொல்லி ஏற்படுத்திய ஒழுக்கங்கள். அப்பொழுதுதான் பயபக்தியோடு சுத்தமாக இருப்போம் என்பதற்காகத்தான் இவற்றைச் சொன்னார்கள்.

மேலே சொன்ன தீட்டெல்லாம் தலைக்கு குளித்து உடலை சுத்தம் செய்தால் போய்விடும். சிலர் தீட்டு பட்டு விட்டால், மஞ்சள் கலந்த நீரை தலையில் அல்லது தீட்டு பட்ட இடத்தில் தெளித்து விடுவர். தீட்டு என்பது வேறு அவை காமம், குரோதம், லோபம், மதம், மாற்சரியம் என்னும் பஞ்சமா பாதங்கள்!

Theeddu - Thoomai - Thodakku

காமத் தீட்டு:

காமம் என்பது ஆசை.

நாம் எந்தப்பொருள் மீதாகிலும் ஆசை வைத்தால், அந்தப் பொருளின் நினைவாகவே ஆகிவிடுகின்றோம். நம் உள்ளத்தில் எந்த நேரமும், அந்தப் பொருள் மீதே ஞாபகமாக இருப்போம். அதற்காகவே முயற்சிச் செய்வதும், அலைவதுமாக இருப்போம். அந்தப் பொருள் கிடைத்து விட்டால், மனத்தில் சந்தோசம் உண்டாகும். இல்லையென்றால் மனத்தில் சதா வேதனை ஏற்படும். இப்படிப்பட்ட நேரங்களில் இறைவனைப் பற்றிச் சிந்தனை செய்ய முடியாது.

இதனால் தான், ஆசைக்கு அடிமை ஆகாதே, அதை தீண்டாதே என்றார்கள்.

குரோதத் தீட்டு:

குரோதம் என்பது கோபம்.

யாராக இருந்தாலும் கோபம் வந்துவிட்டால் முன்னே பின்னே பாராமல், தாய், தந்தையர், சகோதரர்கள், உறவினர்கள் என்றும் சிந்திக்காமல், கொடூரமாகப் பேசுவதும், கேவலமான நிலைக்கு ஆளாவதும் நேர்கின்றன. சிலர் கொலை செய்துவிட்டு ஆயுள் பூராகவும் துன்பம் அனுபவிப்பார்கள். சிலர் தூக்கில் இடப்படுவார்கள். கோபத்தைப்போல் கொடியது உலகத்தில் வேறு எதுவும் இல்லை.

கோபத்தால் அழிந்தவர்கள் கோடான கோடிப்பேர், கோபம் எழும் பொழுது நம் உடலில் உள்ள எத்தனையோ ஜீவ அணுக்கள் செத்து மடிகின்றன. ஆயுளும் குறைந்து விடுகிறது. கோபத்தால் உணர்ச்சி வசப்பட்டவர்கள் எதையுமே செய்யத் துணிவார்கள். இவர்களால் இறைவனைப் பற்றிச் சிந்தனை செய்ய முடியாது.

இதனால் தான் கோபத்திற்கு அடிமை ஆகாதே, அதைத் தீண்டாதே என்பர். குரோதம் என்னும் கோபமே இரண்டாவது தீட்டு.

லோபத் தீட்டு:

லோபம் என்பது சுயநலம்.

பிறரைப் பற்றிச் சிந்திக்காமலும்,இரக்கம் என்பதே இல்லாமலும், சுயநலத்துடன் பொருள்களைச் சேர்த்துவைத்து அழகு பார்ப்பதும், கஞ்சத்தனமும், எல்லாவற்றையும் தானே அனுபவிக்க வேண்டும் என்ற எண்ணமும், தீய வழியில் பொருள்களைச் சம்பாதிக்கக் கூடிய நோக்கமும், வஞ்சனை செய்து, பிறர் பொருளை அபகரித்துத் தானே வாழ நினைக்கும் குணமும், எப்பொழுதும் தன் பொருள்களைப் பற்றுடன் பாதுகாப்பது ஆகிய எல்லாம் சுயநல வேகமே. இப்படிப் பட்ட நேரங்களில் இறைவனைப் பற்றிச் சிந்தனை செய்ய முடியாது.

அதனால் தான் சுயநலத்திற்கு அடிமை ஆகாதே, அதைத் தீண்டாதே என்பார்கள். இது லோபம் என்னும் மூன்றாவது தீட்டு.

மதத் தீட்டு:

மதம் என்பது கர்வம் (ஆணவம்).

ஒருவரையும் மதிக்காது மனதையோடு இருப்பது இது. எதையும் தானே சாதிக்க முடியும் என்ற கர்வமும் இது. தான் என்னும் அகந்தையால் திமிர் பிடித்து அலைவதும் இது. ஆணவ நெறியால் யாவரையும் துன்பப் படுத்தித் தான் மகிழ்ச்சி அடைவதும் இது. இப்படிப்பட்ட நேரங்களில் இறைவனைப் பற்றிச் சிந்தனை செய்ய முடியுமா?

இதனால் தான் கர்வத்திற்கு அடிமை ஆகாதே என்பர். அதைத் தீண்டாதே என்பர். கர்வமாகிய மதமே நான்காவது தீட்டு.

மாற்சரியத் தீட்டு:

மாற்சரியம் என்பது பொறாமை.

பிறர் வாழ்வதைக் கண்டு பொறுக்க முடியாமல் வேதனைப்படுவது இது. எந்த நேரமும் நாம் நல்லபடியில்லையே என்று தன்னையே நொந்து கொள்வதும் இது. எல்லாரும் சுகமாக இருக்கின்றார்களே, இவர்கள் எப்பொழுது கஷ்டப் படுவார்கள், எப்பொழுது செத்துப் போவார்கள் என்பதும் இது. தான் மட்டும் சுகமாக இருக்கவேண்டும் சாகக் கூடாது என்பதே இவர்கள் எண்ணம். பிறரைப் பார்க்கும் பொழுது தீய எண்ணங்களுடன் பெருமூச்சு விடுவார்கள். தாழ்வு மனப்பான்மையோடு, யாரைப் பார்த்தாலும் சகிக்க முடியாமல் எரிச்சலோடு இருப்பார்கள். இப்படிப்பட்ட நேரங்களில் இறைவனைப் பற்றிச் சிந்தனை செய்ய முடியுமா?

இதனால் தான் பொறாமைக்கு அடிமை ஆகாதே, அதைத் தீண்டாதே என்றனர். இதுதான் ஐந்தாவது தீட்டு.

இவை ஐந்தும் மாபெரும் தீட்டுகள். இந்தத் தீட்டுக்களையுடைவர்கள்.. இறைவனை வழிபட முடியாது. இறைவன் இருக்கும் இடத்தில் இந்தத் தீட்டுகள் ஆகாது.

Desi Men bath with Trunk Underwear

Desi Men bath with Trunk Underwear

Desi Men bath with Trunk Underwear

Desi Men bath with Trunk Underwear

Desi Men bath with Trunk Underwear

Desi Men bath with Trunk Underwear

Desi Men bath with Trunk Underwear

Desi Men bath with Trunk Underwear

Desi Men bath with Trunk Underwear

Desi Men bath with Trunk Underwear

Desi Men bath with Trunk Underwear

Keywords: தீட்டு என்பது இந்து சமயத்தில், பிறப்பு, இறப்பு, மாதவிடாய் போன்ற நிகழ்வுகளால் ஏற்படும் ஒரு வகையான அசுத்தம் அல்லது தீண்டத்தகாத நிலைமையைக் குறிக்கிறது, இதனால் குறிப்பிட்ட காலத்திற்கு புனித காரியங்களில் ஈடுபடுவதைத் தவிர்த்து, தூய்மையடையும் வரை விலகி இருப்பது வழக்கம்; இதற்கு துடக்கு, ஆசௌசம் போன்ற பெயர்களும் உண்டு, இது உறவினரின் இறப்பு அல்லது வீட்டில் குழந்தை பிறப்பு போன்ற நிகழ்வுகளைப் பொறுத்து பல நாட்கள் நீடிக்கும், மேலும் இது ஒருவரின் உடல் அல்லது செயல்பாட்டில் ஏற்படும் அசுத்தத்தையும் குறிக்கும்.